ரஜினி சொன்னது சரிதான்... பொன்.ராதா ஆதரவு

நடிகர் ரஜினிகாந்த் கூறியதுபோல் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

ரஜினி சொன்னது சரிதான்... பொன்.ராதா ஆதரவு

நடிகர் ரஜினிகாந்த் கூறியதுபோல் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக மற்றும் திமுக மறுப்பு தெரிவித்த நிலையில், பாஜகவை சேர்ந்த பொன்.ராதா கிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் கூறியதுபோல் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்றும் ஜெயலலிதா, கருணாநிதி போல் ஈர்ப்பு விசை கொண்ட தலைவர்கள் இப்போது இல்லை எனவும் தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP