தி.மு.க நிர்வாகியின் சம்பந்தியால் புதிய சிக்கலில் ரஜினி..!

கட்சியை ஆரம்பிப்பதற்குள் நிர்வாகிகள், மற்றும் மன்றத்தினரின் செயல்பாடுகள் ரஜினிக்கு அவ்வப்போது தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.
 | 

தி.மு.க நிர்வாகியின் சம்பந்தியால் புதிய சிக்கலில் ரஜினி..!

கடந்த டிசம்பரில் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்த ரஜினி வரும் டிசம்பர் மாதத்திலாவது கட்சிப்பெயரையும், கொடியையும் அறிவித்து விடுவார் எனக் காத்திருக்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள். 

கட்சியே ஆரம்பிப்பதற்குள் நிர்வாகிகள், மற்றும் மன்றத்தினரின் செயல்பாடுகள் ரஜினிக்கு அவ்வப்போது தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்த ரஜினி ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோரை நிர்வாகிகளாக நியமித்திருந்தார். ஆனால், பேட்ட படத்திற்கான  ஷூட்டிங்கிற்காக ரஜினி வடமாநிலத்தில் இருந்த போது சுதாகர், ராஜூ மகாலிங்கம் ஆகிய இருவர் மீதும் அடுக்கடுக்காக புகார்கள் பறந்தன.

தி.மு.க நிர்வாகியின் சம்பந்தியால் புதிய சிக்கலில் ரஜினி..!

இதனால், ஷூட்டிங் இடைவெளியில் சென்னை திரும்பிய ரஜினி, சுதாகர், ராஜூ மகாலிங்கத்தை ஓரம் கட்டினார். பின்னர் கடலூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் இளவரசனை ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழக-புதுவை மாநில அமைப்புச் செயலாளராக அறிவித்து அவரது செயல்பாட்டில் வழிநடத்தி அறிவுறுத்தினார் ரஜினி. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளவரசன் மன்றத்தினரின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து ரஜினிக்கு அனுப்பி வந்தார். 

தி.மு.க நிர்வாகியின் சம்பந்தியால் புதிய சிக்கலில் ரஜினி..!

மன்றக்கூட்டங்களை பல பகுதிகளிலும் நடத்தி வரும் இளவரசன் ‘’ நம் மன்றத்தில் கட்டுக்கோப்புடன் இல்லாதவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவீர்கள்’’ என கறாராக பேசி வந்து நிர்வாகிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. நிர்வாகிகள் மீது இளவரசன்  அனுப்பும் புகார் பட்டியல்களை வைத்து கண்ணை மூடிக்கொண்டு ரஜினி நடவடிக்கை எடுத்து விடுகிறார். அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறார்’ எனக்கொதிக்கிறார்கள் நிர்வாகிகள். 

எத்தனையோ ஆண்டுகள் ரசிகராக இருந்து, கஷ்டப்பட்டு உடனிருந்த  பலரையும் பொறுப்புக்கு ரஜினி நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. ராஜூ மகாலிங்கம், இளவரசன் என புதியவர்கள் வந்து தங்களை கட்டுப்படுத்துவதால் ரஜினி மீது கோபத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இதனால், ரசிகர்கள் பலரும், சில நாட்களாக ரஜினி வீட்டுக்கு வருவதை குறைத்துக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரஜினி, ‘இந்தச் சிக்கலை எப்படி அணுகுவது?’ என தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம்.   

தி.மு.க நிர்வாகியின் சம்பந்தியால் புதிய சிக்கலில் ரஜினி..!

                                                                டாக்டர் இளவரசனின் சம்பந்தி வீரபாண்டி ராஜா

ரஜினி மக்கள் மன்ற அமைப்புச் செயலாளராக இருக்கும் இந்த இளவரசன் தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர். வீரபாண்டியாரின் மகன் ராஜாவின் மூத்த சம்பந்தி இளவரசன். இரண்டாவது சம்பந்தியான  நீலா ஜெயக்குமாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP