Logo

ரெய்டோ ரெய்டு: பொதுத் தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை பந்தாடுகிறாரா?

ரைடு போவதன் ரிஸ்க் என்னவென்று ஐடி அலுவலகத்திற்கு நன்கு தெரியும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சி என்பது இன்றைக்கு இருக்கும் நாளைக்கு மாறிடலாம். அவர்கள் பேச்சைக் கேட்டெல்லாம் ஆடும் அளவிற்கு எடுப்பார் கைப்பிள்ளை அல்ல வருமானவரித் துறை. அதுவும் தேர்தல் சமயத்தில்.
 | 

ரெய்டோ ரெய்டு: பொதுத் தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை பந்தாடுகிறாரா?

திமுக பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை. மற்ற மாநிலங்களில் எல்லாம் எதிர்க்கட்சிகள் மீது வருமானவரித்துறையை ஏவி விடாத  மத்திய அரசு, தமிழகத்தில் மட்டும் ஏவி விடுகிறதா? தேர்தல் சமயத்தில் இதுவெல்லாம் திமுகவுக்கு அனுதாப அலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று போட்டி கட்சிகளுக்குத் தெரியாதா என்ன? நிஜமாகவே என்ன நடக்குது தமிழகத்தில்? 

மத்திய அரசோ மாநில அரசோ தன் அதிகாரத்தை பயன்படுத்தி யார் மீதும் வருமான வரிச்சோதனை மேற்கொள்ள வேண்டு என்று உத்தரவிட முடியுமா? முடியும். ஆனால்,  ஒரு தொழிலதிபர் அல்லது அரசியல்வாதி வீட்டிற்குச் சோதனை என்று போய் விட்டு அங்கே ஒன்னுமில்லை என்று அவ்வளவு சாதாரணமாகத் திரும்பி வந்து விட முடியாது. அப்படிச் செய்தால் அந்த அரசிற்கு ஏற்படும் நட்டம் மிகப் பெரிய அளவில் இருக்கும்.  வெறும் கையுடன் திரும்பினால், சம்பந்தப்பட்ட நபர் மறுநாளே வருமானவரித் துறையினரை நீதிமன்றத்திற்கு இழுத்து வழக்குத் தொடுக்க வாய்ப்புண்டு. 

ரெய்டோ ரெய்டு: பொதுத் தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை பந்தாடுகிறாரா?

எனவே, துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வீட்டிற்கு சும்மாவெல்லாம் ரெய்டு என்று போய் விட முடியாது. ரைடு போவதன் ரிஸ்க் என்னவென்று ஐடி அலுவலகத்திற்கு நன்கு தெரியும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சி என்பது இன்றைக்கு இருக்கும் நாளைக்கு மாறிடலாம். அவர்கள் பேச்சைக் கேட்டெல்லாம் ஆடும் அளவிற்கு எடுப்பார் கைப்பிள்ளை அல்ல வருமானவரித் துறை. அதுவும் தேர்தல் சமயத்தில்.

வருமானவரிச் சோதனைக்கு யார் காரணம் என்பதைப் பிறகு பார்க்கலாம். இப்ப இதுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். சோதனையின் போது பணம் மற்றும் இதர ஆவணங்கள் பிடிபட்டதா இல்லையா? அது யாருடைய பணம் என்பதை துரை முருகன் போன்றோர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா வேண்டாமா? ரைடு வந்தது அரசியல் காரணம் என்று பேசும் நாம், ஏன் பிடிபட்ட பணம் பற்றி பேச மாட்டேன் என்கிறோம்? பேசும் அளவுக்கு நமக்கு யோக்யதை இல்லையா? பிடிபட்ட பணத்தைப் பற்றி ஏன் ஸ்டாலின் பேச மாட்டேன் என்கிறார்? அதை ஏன் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்கிறார்?

 அதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப நாம ஒரு லாஜிக் பார்ப்போம். துரைமுருகன், ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் போன்றவர்களிடம் தேர்தல் சமயத்தில் கருப்புப் பணம் புழங்கும் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்த அனைவருக்கும் தெரியும் தானே?

பின் ஏன் அவர்கள்  அனைவரின் வீட்டிற்கெல்லாம் ரைடு போகவில்லை? அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றால், ஏன் துரைமுருகன் என்ற கொக்கு தலையில் வெண்ணெயை வைக்கணும்? நேரடியாக ஸ்டாலின் குடும்பத்தின் மீதே வைத்திருக்கலாமே? விசயம் ரொம்ப எளியது.

ரெய்டோ ரெய்டு: பொதுத் தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை பந்தாடுகிறாரா?

துரை முருகன் வீட்டில் பணம் இருக்கும் விசயம், இடம், நபர் உட்பட அனைத்தும் தெரிந்த ஒருவர் தான் சோர்ஸ் கொடுத்து மாட்டி விட்டிருக்க முடியும். அது நிச்சியமாக திமுக ஆளாகத் தான் இருக்க முடியும். அதுவும் திமுகவின் பெருந்தலைகளுக்கு மிகவும் நெருக்கமான ஆளாகத்தான் இருக்க முடியும் இல்லையா? துரைமுருகன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனைப் போட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவில் யாருக்கு இருக்கிறது என்று யோசியுங்கள்.

ஏற்கனவே திமுக சீனியர் பட்சிகள் மிகத் தெளிவாகச் சொல்லி வரும் விசயம், ஸ்டாலினின் அருகாமை அதாவது ஸ்டாலினுக்கு அடுத்ததாகக் கட்சித் தலைமை என்பதன் மீது தீவிரக் கண் வைத்திருப்பவர் கனிமொழி, மாறன் சகோதரர்கள் மற்றும் ஆ.ராசா ஆகியோர்கள் தான். அத்துடன் துரைமுருகன் இல்லாமல் ஸ்டாலின் எந்த அரசியல் நகர்வினையும் செய்வதில்லை. சரி! அவர் இருக்கும் வரை இவருக்கு உறுதுணையாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அந்த நெருக்கத்தை பயன்படுத்தி தன் மகனையும் அதே இரண்டாம் நிலைப் பொறுப்பில் திணிக்கப் பார்கிறார். 

எனவே. இந்தத் தேர்தல் மற்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மேலே சொன்ன நால்வர் + தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரை கடும் உள்ளடி வேலை பார்த்தாவது காலி பண்ணிவிட மிகவும் பெரிய கேம் நடக்கிறதாம். இதில் துரைமுருகன் விசயம் மட்டும் ஸ்டாலினுக்கும் தெரியாமல் நகர்த்தப்பட்ட காயாம். எதற்கு இத்தனை பெரிய ரிஸ்க்கான விளையாட்டு? யார் விளையாடுகிறார்கள்?

அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளுக்கு, கட்சியையும் சொத்தையும் காப்பாற்றினால் போதும் ஆட்சியெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அடுத்த தலைமையை மச்சானும் மைத்துனனும் முழுமையாகக் கைப்பற்ற ஆடும் ஆட்டம் இது. தேர்தல் ரிசல்ட் வந்த பின் கட்சிக்குள் பல வெடிப்புகள் நிச்சயம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 
ரைடாவது கைடாவது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP