ராகுல் பிரதமர்; மு.க. ஸ்டாலின் முதல்வர்: ப.சிதம்பரம் மகன் ஆருடம்!

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் வருவார்கள் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 | 

ராகுல் பிரதமர்; மு.க. ஸ்டாலின் முதல்வர்: ப.சிதம்பரம் மகன் ஆருடம்!

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகவும் வருவார்கள் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பைரவர் கோயிலில் இன்று கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம் செய்தார். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் வருவார்கள். சிவகங்கையில் தொழிற்சாலைகளை கொண்டுவந்து  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதுதான்  எனது முதல் வேலை' என்று தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹெ.ச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் களமிறக்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP