வடக்கில் வெற்றி பெற முடியாது என்பதால் தெற்கில் ராகுல் போட்டி: இல.கணேசன்

வடக்கில் வெற்றி பெற முடியாது என்பதால் தென்னிந்திய தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக, சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.
 | 

வடக்கில் வெற்றி பெற முடியாது என்பதால் தெற்கில் ராகுல் போட்டி: இல.கணேசன்

வடக்கில் வெற்றி பெற முடியாது என்பதால் தென்னிந்திய தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “வடக்கில் வெற்றி பெற முடியாது என்பதால் தென்னிந்திய தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம், ராகுல் போட்டியிடும் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளவை பொருளாதார ரீதியாக சாத்தியமாகாது. பாஜகவுக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது. கீ.வீரமணி போன்ற பெரியவரிடமிருந்து கிருஷ்ணர் குறித்த கருத்தை எதிர்பார்க்கவில்லை"என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP