குப்புராமுவுக்கு முதல் மகுடம் சூட்டினார் பிரதமர் மோடி: தமிழக பாஜகவினர் உற்சாகம்!

மாஃபியா கும்பல்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வர தொழில் அதிபர்கள் உள்ளிட்டோரின் மிரட்டல்களுக்கு, கமிஷனுக்கு படிந்துவிடாமல் துணிந்து நின்று பணியாற்றி, ஊழலை ஒழிக்கும் இடத்தில் குப்புராமு அமர்த்தப்பட்டுள்ளார். அதுவும், யாருடைய தலையீடும் இன்றி, நேரடியாக பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரே கண்காணிக்கும் துறைக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இயக்குனர் என்பது கத்தி மேல் நடப்பதற்கு சமமானதே.
 | 

குப்புராமுவுக்கு முதல் மகுடம் சூட்டினார் பிரதமர் மோடி: தமிழக பாஜகவினர் உற்சாகம்!

தமிழக பாஜகவில் மாநில துணை தலைவராக இருப்பவர் குப்புராமு. இளம் வயது முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து தீவிரமாக சங்க பணியாற்றிய இவர், பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தீவிர ஹிந்துத்வ கொள்கை உடைய இவர், காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் அமல்படுத்த முயன்ற ராமர் பால உடைப்பு திட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தனி ஒருவராக வழக்கு தொடர்ந்தார். 

இதற்காக அவர் கொடுத்த விலை மிக மிக அதிகம். அப்போது திமுக முக்கிய தலைவர்களால் கொலை மிரட்டலுக்கு ஆளானார். தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போனது. எது எப்படி இருப்பினும், தான் கொண்ட கொள்கையில் குறிக்கோளாய் இருந்து அத்திட்டத்தை தடுத்து நிறுத்தியதில் பெரும்பங்காற்றினார். 

பிற அரசியல் தலைவர்களை போல ஓட்டு வங்கி அரசியலுக்காக, தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபடாமல், தேர்தலில் போட்டியிட்டபோதும், நேர்மையான வழியை கடைபிடித்தார். லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று தோல்வி அடைந்தாலும் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றினார். 

குப்புராமுவுக்கு முதல் மகுடம் சூட்டினார் பிரதமர் மோடி: தமிழக பாஜகவினர் உற்சாகம்!

கட்சியில் பல ஆண்டுகால இருந்து வரும் தலைவர்கள், மாற்று கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தோர் என பல தலைவர்களும் தேர்தலில் நிற்க சீட் கேட்டும், அதற்கான லாபியில் ஈடுபட்டும் வந்த நிலையில், இவரைப்போன்ற நேர்மையான தலைவர்கள் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும் என கட்சியின் மத்திய தலைமையே விரும்பி குப்புராமுவுக்கு சீட் வழங்கியது இவரின் நேர்மைக்கு சான்று. 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு பலமாக எழுந்துள்ளது. மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் என பலரும், மாநில தலைவர் பதவியை பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, மத்திய தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் குப்புராமுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

கட்சியின் உளவுத்துறை அறிக்கையில் இவரைப்பற்றி மிக நல்ல வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றைப்பற்றி ஏற்கனவே நாம் எழுதியிருந்த கட்டுரைகளில் பார்த்தோம். இந்நிலையில், கை மிகவும் சுத்தமாக இருக்க  மிக மிக முக்கிய பதவி ஒன்று குப்புராமுவை தேடி வந்துள்ளது. 

குப்புராமுவுக்கு முதல் மகுடம் சூட்டினார் பிரதமர் மோடி: தமிழக பாஜகவினர் உற்சாகம்!

கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான இவரை, என்.எம்.டி.சி., எனப்படும் தேசிய கனிமவள மேம்பாட்டு கழகத்தின் தனிப்பொறுப்புடன் கூடிய இயக்குனராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முடிவு, பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அதாவது, கடந்த 6 மாதங்களாகவே இது குறித்த கோப்பு நிலுவையில் இருந்தாகவும், மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல்களுக்காக கோப்புகள் கிடப்பில் போடப்பட்டிருந்ததகவும் கூறப்படுகிறது. கட்சியின் உளவுத்துறை அறிக்கை படி, இவர் மிகவும் நேர்மையானவர் என்றும், சங்க பணி, கட்சி பணி ஆகியவற்றில் சொந்த விருப்பு வெறுப்பின்றி உழைத்து வருபவர் என்றும் மோடியிடம் அறிக்கை அனுப்பப்பட்டதாம். 

இதன் அடிப்படையில், கடந்த 2 மதங்களுக்கும் மேலாக இவரைப்பற்றி விசாரித்து கூர்ந்து கவனித்த பிறகு, அவருக்கு அந்த பதவியை மோடியே நேரடியாக வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. என்.எம்.டி.சி., இயக்குனர் பொறுப்பு என்பது மற்ற துறைகளில் உள்ள கவுரவ பதவி போன்றது அல்ல. 

குப்புராமுவுக்கு முதல் மகுடம் சூட்டினார் பிரதமர் மோடி: தமிழக பாஜகவினர் உற்சாகம்!

கத்தி மேல் நடப்பது போன்றும், நெருப்புடன் விளையாடுவது போன்றதும் ஆகும். நாட்டில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க நினைக்கும் பணப்பிசாசுகள் பலவும், இவரை மிரட்டக்கூடும். தங்களுக்கு ஆதரவாக டெண்டரை தரச்சொல்லி கேட்கும். 

இதற்கு முன் இருந்த இயக்குனர்களை கையில் போட்டுக்கொண்ட வைகுந்தராஜன், தாது மணல் ஏற்றுமதியில் கோடிக்கணக்கில் காசு பார்த்தார். பல்வேறு ஊழல்களை செய்து சிக்கினார். அவரின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கே 2 ஆண்டுகள் தேவைப்பட்டது. அவரது லாபி அவ்வளவு பெரியது. 

அதே போலத்தான், கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள், கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் சில மாஃபியா கும்பல்களும், கனிம கொள்ளையில் ஈடுபட்டன. 

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் பொது, அந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இயக்குனர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மாஃபியாக்கள் கொள்ளை அடித்து அதில் அவர்களுக்கும் பங்கு கொடுத்தன. 

இது போன்ற கொள்ளைகளை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அப்பழுக்கற்ற ஒருவரை என்எம்டிசி இயக்குனராக நியமிக்க பிரதமர் மோடி திட்டமிட்டார். அவரின் நீண்ட தேடுதலின் பலனை, குப்புராமு அவரை பார்வையில் பட்டத்தை தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த அந்த பதவியில் குப்புராமு நியமிக்கப்பட்டுள்ளார். 

பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்கள், குத்தகைகளை கையாளும் இடத்தில் அவர் அமரவைக்கப்பட்டுள்ளார். உண்மையில் அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக இதை பார்த்தாலும், நிச்சயம் இந்த பதவி குப்புராமுவுக்கு பல சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும் எனலாம். 

மாஃபியா கும்பல்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வர தொழில் அதிபர்கள் உள்ளிட்டோரின் மிரட்டல்களுக்கு, கமிஷனுக்கு படிந்துவிடாமல் துணிந்து நின்று பணியாற்றி, ஊழலை ஒழிக்கும் இடத்தில் குப்புராமு அமர்த்தப்பட்டுள்ளார். அதுவும், யாருடைய தலையீடும் இன்றி, நேரடியாக பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரே கண்காணிக்கும் துறைக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இயக்குனர் என்பது கத்தி மேல் நடப்பதற்கு சமமானதே. 

குப்புராமுவுக்கு முதல் மகுடம் சூட்டினார் பிரதமர் மோடி: தமிழக பாஜகவினர் உற்சாகம்!

சரி, இவரை கட்சிப்பணிக்காக, ஒரு பொறுப்பு வழக்கப்பட்டுவிட்டது, இனி தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் குப்புராமு இருக்கமாட்டார் என சிலர் நிம்மதி அடையளாம். ஆனால் நிதர்சனம் வேறு. இப்போதுதான் அவர் போட்டியில் முன்னிலையில் ஓடிக்கொண்டிருக்கிறார்; அதுவும் பிரதமரின் நேரடி பார்வையில். 

ஆம், ஊழலே செய்யாமல், சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்த, கரைபடியாத கரத்துக்கு சொந்தக்காரரான ஒருவருக்கு, சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. குப்புராமுவின் நேர்மைக்கு அங்கீகாரமாக, கனிம வளக்கொள்ளையை தடுக்கும் பாதுகாவலன் என்ற அடிப்படையில் அவர் என்.எம்.டி.சி., இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அரசு துறை சார்ந்த நிறுவனத்தை இவ்வளவு கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ளும் பிரதமர், தான் இன்று அந்த பதவியில் இருக்கவே காரணமாக இருக்கும் கட்சியின் வளர்ச்சியில் எவ்வளவு அக்கறை காட்டுவர். அதுதான் தற்போது நடந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது, திராவிடம் பேசும் கழக அரசியல்வாதிகளை சாராமல், அவர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் சொந்த லாபத்திற்காக அரசியல் செய்யாமல் இருக்கும் ஒரு தலைவரைதான் தமிழக பாஜகவை வழிநடத்த, மாநில தலைவராக நியமிக்க வேண்டும் என்பதில் மோடியும், அமித் ஷாவும் உறுதியாக உள்ளனர். 

அந்த வகையில், குப்புராமுதான் அவர்களின் தேர்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சியின் மேலிட தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்ட நிலையில், மாநிலதலைவர் பதவிக்கு முன், தேசிய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் அவர் அமர்த்தப்பட்டுள்ளார். 

இதன் மூலம் பிரதமர் மோடி, பாஜகவினருக்கு தெளிவான ஓர் உண்மையை உணர்த்தியுள்ளார். உண்மையாக, கறைபடியாமல், கட்சிக்காக உழைக்கும் எவருமே வீண் போகப்போவதில்லை. நேர்மைக்கும், உழைப்புக்கும் கட்சியில் என்றும் அங்கீகாரம் உண்டு என்பதை மறைமுகமாக கோடிட்டு காண்பித்துள்ளார். பிரதமரின் இந்த செயல், தமிழக பாஜகவில் கட்சியின் வளர்ச்சியை மட்டுமே மனதில் வைத்து பணியாற்றி வருவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

newstm.in
 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP