ஓமலூர் அருகே தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வாக்குச்சாவடி மைய பணியாளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
 | 

ஓமலூர் அருகே தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வாக்குச்சாவடி மைய பணியாளர்கள் வரிசையில்  நின்று வாக்களித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி, நாமக்கல், தருமபுரி மக்களவை தொகுதிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

7 கட்டங்களாக நடைபெறவுள்ள 17வது மக்களவை தேர்தல், தமிழகத்தில் 2-ஆம் கட்டமாக வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 

நேற்று இந்தோ- திபெத்  எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP