தமிழக பாஜகவின் புதிய  தலைவர் நியமனம் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி !

இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தமிழக பாஜகவிற்கான புதிய தலைவரை நியமிக்க உள்ளதாக பொன்ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
 | 

தமிழக பாஜகவின் புதிய  தலைவர் நியமனம் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி !

இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தமிழக பாஜகவிற்கான புதிய தலைவரை நியமிக்க உள்ளதாக பொன்ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரான தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன்அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

மேலும்  பாஜகவில் உழைக்கும் அனைவருக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதால் இனிமேல் அவரை பாஜகவுடன் இணைத்து பேசக்கூடாது என கூறினார். 

பின்னர் தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP