பதற வைக்கும் பொம்பள சர்க்கார்... சசிகலாவை சீண்டும் சகுந்தலா

அக்னிதேவ் திரைப்படத்தின் ட்ரெய்லரில் மதுபாலா நடித்துள்ள பாத்திரம் அரசியலில் சசிகலாவை நினைவு படுத்துவதால் இந்தப்படத்திற்கு அவரது ஆதரவாளர்களால் எதிர்ப்புகள் கிளம்புவது உறுதியாகி இருக்கிறது.
 | 

பதற வைக்கும் பொம்பள சர்க்கார்... சசிகலாவை சீண்டும் சகுந்தலா

பாபி சிம்ஹா நடித்துள்ள அக்னிதேவ் திரைப்படத்தின் ட்ரெய்லரில் மதுபாலா நடித்துள்ள பாத்திரம் அரசியலில் சசிகலாவை நினைவு படுத்துவதால்  இந்தப்படத்திற்கு அவரது ஆதரவாளர்களால் எதிர்ப்புகள் கிளம்புவது உறுதியாகி இருக்கிறது. 

பதற வைக்கும் பொம்பள சர்க்கார்... சசிகலாவை சீண்டும் சகுந்தலா

 'அக்னி தேவ்' படத்தை இயக்குநர்கள் ஜே.பி.ஆர் - ஷாம் சூர்யா இணைந்து இயக்குகிறார்கள். பிரபல எழுத்தாளரான க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் எழுதிய ஒரு நாவலின் தழுவல் தான் அக்னி தேவ். இந்தப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
வெகு நாட்களுக்குப் பிறகு நடிகை மதுபாலா சகுந்தலா தேவி என்கிற பெயரில் நடித்துள்ளார். அவரது பெயர், பாத்திரம், நடை, உடை அனைத்தும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நினைவு படுத்துவதாக இருக்கிறது. 

1.52 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்த ட்ரெய்லர் சகுந்தலா கதாபாத்திரத்தை தெளிவாக புட்டுபுட்டு வத்திருகிறது. இது அரசியல் படம், மதுபாலா அதிரடியான பெண் அரசியல்வாதியாக அதிரடி காட்டுவார் என்பதை விளக்கி விடுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை சாதாரண உடையில் இருந்த சசிகலா அடுத்து தனது நடை உடை பாவனைகளை மாற்றினார். அதே போல் சாதாரண சேலையில் இருக்கும் சகுந்தலா கதாபாத்திரம் அடுத்து சசிகலாவைப்போல உடையணிந்து கம்பீரம் கூட்டுகிறது. 

பதற வைக்கும் பொம்பள சர்க்கார்... சசிகலாவை சீண்டும் சகுந்தலா

’உன்ன மாதிரி ஆம்பளைங்க எத்தனைபேரை என் காலுக்குக் கீழ போட்டு நசுக்கிட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன் தெரியுமா? புடுங்கி..’ என்கிற வசனம், எத்தனையோ ஆண்கள் இருந்தும் ஜெயலலிதாவுக்கு அடுத்து நான்தான்... என சசிகலா சொல்வதாகவே நினைவுக்கு வந்து போகிறது. 
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ஓடுவதும் ஜெயலலிதா மருத்துவமனையி சிகிச்சை பெற்றதை கிளறிவிட்டுப் போகிறது. முதலமைச்சராக பதியேற்கும் சகுந்தலா தேவி தன் கட்சியினரைப் பார்த்து ’’என் வீல்சேர் டயர நக்கிக்கிட்டு கிடக்கிறதா இருந்தா கெடங்க’’ என்கிறார் ’’குனிஞ்சு குனிஞ்சு கும்பிடு போட்டா அப்படியே நம்பிடுவன்னு நினைச்சியா..?’’ என்றொரு வசனம். ஜெயலலிதா தனக்கு பணிவானர்களையும், தன்னை புகழ்பவர்களையும்  நம்பி அழைத்து பதவி கொடுத்து நம்புவார். அதனை சசிகலா குத்திக் காட்டி பேசுவதாக அந்த வசனம் மூலம் வாசனை தெளித்துள்ளனர்.

பதற வைக்கும் பொம்பள சர்க்கார்... சசிகலாவை சீண்டும் சகுந்தலா

 ’உன் கண்ணுமுன்னாடி எமனை ஒரு பொம்பள ரூபத்துல பார்க்கப்போற... சகுந்தலா தேவியாகிய நான்... அரசியல்ல கனவுல வர்ற விரோதியக்கூட நிஜத்துல இல்லாம பண்ணிடுவேன்’ போன்ற வசனங்களும், வயதான தோற்றத்தில் வரும் மதுபாலாவுக்கு பின்னால் இளவயது ஜெயலலிதாவின் படம் மாட்டப்பட்டிருப்பதும் சசிகலா கேரக்டை கண் முன் நிறுத்துகிறது. வயதான தோற்றத்தில் தனியறையில் சகுந்தலாவாக வரும் மதுபாலா அழுது புலம்புவதும், சசிகலா பெங்களூரு சிறையில் வாடுவதை காட்சிப்படுத்துகிறது. 

படத்தின் ட்ரெய்லரிலேயே இத்தனை சமாச்சாரங்கள் சசிகலாவை அப்பட்டமாக நினைவுபடுத்தி விட்டு போகிறது. படத்தில் சர்ச்சைகளுக்கு படையலே இருக்கும் என்பதால் சசிகலா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP