தமிழகத்தின் 37 மக்களவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நிறைவு

தமிழகத்தின் 37 தொகுதிகளில், மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு, இன்று மாலை, 6:00 மணியுடன் நிறைவடைந்தது.
 | 

தமிழகத்தின் 37 மக்களவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நிறைவு

தமிழகத்தின் 37 தொகுதிகளில், மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு, இன்று மாலை, 6:00 மணியுடன் நிறைவடைந்தது. 

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கியது. பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்கள், நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5:00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம், 63.73 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இந்நிலையில், மாலை, 6:00 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. 37 தொகுதிகளிலும், வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. வாக்குப் பதிவு தாமதமாக துவங்கிய வாக்குச் சாவடிகளில் மட்டும், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

அதே போல், மதுரையில் சித்திரை திருவிழாவை ஒட்டி, இரவு 8:00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP