அரசியல்வாதிகள் என்னை விட நடிக்கின்றனர்: கமல்ஹாசன்

காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலத்தை போக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 | 

மதுரை திருநகரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘அரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர்; அதைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடாதீர்கள். மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை, அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது. எங்கள் வேட்பாளர் முறையாக பணியாற்றாவிடில் நானே ராஜினாமா கடிதத்தை வாங்கி மக்களிடம் கொடுப்பேன்’ என்றார்.

மேலும், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலத்தை போக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்த கமல்ஹாசன், என்னால் பணம் கொடுக்க முடியாது; நான் கடன்பட்டிருக்கிறேன் இம் மக்களுக்கு என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP