ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுகிறது: செந்தில்பாலாஜி

’அரவக்குறிச்சி தொகுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுகின்றனர்’ என்று திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுகிறது: செந்தில்பாலாஜி

’அரவக்குறிச்சி தொகுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுகின்றனர்’ என்று திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  செந்தில்பாலாஜி, ‘அரவக்குறிச்சி தொகுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுகின்றனர். தங்களது வீடுகளில் இருந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அரவக்குறிச்சி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இல்லை, போலீஸ் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் திமுக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்றார்.

இதனிடையே, அரவக்குறிச்சி தொகுதியில் பரமத்தி பள்ளி வாக்குச்சாவடியில் பணியில் இருந்த ஆய்வாளர் செல்வமலரை செந்தில்பாலாஜி ஒருமையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி தன்னை ஒருமையில் பேசியதாக ஆய்வாளர் செல்வமலர் எஸ்.பி விக்ரமனிடம் புகார் அளித்துள்ளார்.

newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP