அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும் என்று சுற்றுல்லா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் என்று தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும் என்று சுற்றுல்லா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனு வாங்கும் நிகழ்வு வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுல்லா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ‘பொய்யான வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் அளித்ததால்தான் அப்போது அவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை மக்கள் தெரிந்து கொண்டதால் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவினருக்கு வெற்றி அளித்தார்கள். அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  மாநகராட்சி மேயர் பதவிக்கு 14 ஆண்கள் 13 பெண்கள் என 27 பேரும், 65 மாமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு 282 பேரும் விருப்ப மனு அளித்தனர். அதே போல ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 66 பேரும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு 12 பேரும்,  பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 20 பேரும்  என மொத்தம் 407 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதில் அதிமுக தலைமை யாருக்கு வாய்ப்பு வழங்குகிறதோ அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் பிரச்சாரம் செய்வோம். அதிமுகவிற்கு எதிரிகள் இல்லை, துரோகிகள் அழிந்து விட்டனர். எனவே நாங்கள் தான் வெற்றி பெறுவோம்’ என்றார்.

திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு விருப்ப மனு அளித்ததில் திருச்சி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான ப.குமார் மற்றும் சுற்றுல்லா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால நேருவும் குறிப்பிடதக்க நபர்களாவர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP