பிரதமர் மோடி நாளை கோவை வருகை! 

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
 | 

கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மகேந்திரன் (பொள்ளாச்சி), ஆனந்தன் (திருப்பூர்), தியாகராஜன் (நீலகிரி), ஆகியோரை ஆதரித்து, கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மாலை 6 மணியளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக அவர், நாளை மாலை தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார்.

பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசும் பிரதமர் மோடி, பிரசாரத்தை முடித்து கொண்டு இரவு 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி செல்கிறார்.

newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP