20 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன்

தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் அதனை மக்கள் நீதி மய்யம் சந்திக்கத் தயார் என்றும் நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் இல்லை, நான் மக்களின் கருவி என்றும் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
 | 

20 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன்

தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் அதனை மக்கள் நீதி மய்யம் சந்திக்கத் தயார் என்றும் நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் இல்லை என்றும் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் ரசிகர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "எனது பிறந்தநாள் வாழ்த்து பெறுவதை விட தமிழகத்திற்கு விரைவில் நல்ல பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அந்த நாள் விரைவில் வரும். 

தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் அதனை மக்கள் நீதி மய்யம் சந்திக்கத் தயார். ஊழல் முறைகேடுகள் இல்லாத ஒரு அரசியல் வேண்டும். அதனை மக்கள் நீதி மய்யம் கொடுக்கும். மற்றபடி, நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் கிடையாது. நான் மக்களின் கருவி" என்றார். 

மேலும்,  இலங்கையில் நடந்து வரும் அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘இலங்கையில் என்றாவது ஒருநாள் ஜனநாயகம் வெல்லும். நம் நாட்டிலேயே ஜனநாயகம் சரியில்லாத போது, மற்ற நாட்டின் ஜனநாயகம் குறித்து நான் பேச விரும்பவில்லை' என்று பதிலளித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP