அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்

கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
 | 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்

"கமல் நாக்கை அறுக்க வேண்டும்" என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சென்னை மத்திய வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பிரியதர்ஷினி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் இப் புகார் மனு அளித்துள்ளார். 

அந்த மனுவில், "கமலின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளதாகவும், பொறுப்புடன் செயல்பட வேண்டிய அமைச்சர் நாகரீகமற்ற வார்த்தைகளை பிரயோகித்திருப்பது சட்டப்படி தவறு என்றும், வன்முறையை தூண்டும்விதமாக பேசிய அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP