திமுகவுக்கு வாக்களித்துவிட்டோமே என மக்களே வருத்தப்படுகிறார்கள்- ராஜேந்திர பாலாஜி

தேவையில்லாமல் திமுகவிற்கு ஆதரவு கொடுத்து விட்டோமோ என்று தமிழக மக்கள் வருத்தப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 | 

திமுகவுக்கு வாக்களித்துவிட்டோமே என மக்களே வருத்தப்படுகிறார்கள்- ராஜேந்திர பாலாஜி

தேவையில்லாமல் திமுகவிற்கு ஆதரவு கொடுத்து விட்டோமோ என்று தமிழக மக்கள் வருத்தப்படுவதாக அமைச்சர் ராஜேந்தரை பாலாஜி தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் எண்ணம். மக்களின் பிரதிபலிப்பு தமிழகத்தில் பார்க்க முடிகிறது. இந்த ஆட்சியை நடத்துவதற்கு எவ்வளவு பெரும்பான்மை தேவையோ, அதை எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். 

மக்கள் சிந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் விஷத்தை விதைத்து அதன் மூலமாக திமுக அறுவடை செய்து உள்ளார்கள்.
ஒரு பொய்யான பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்தி அதை நம்பக்கூடிய வகையில் மக்களை கொண்டு சென்று அதன் மூலமாக அவர்கள் வெற்றியை அறுவடை செய்து உள்ளார்கள் இதை உறுதியான வெற்றியாக கருத முடியாது.

இந்தியா முழுக்க பாஜகவின் அலை தான் அடித்துள்ளது. ஆறு மாத காலமாக இந்த ஆட்சியின் மீது புழுதி வாரித்தூற்றுவது, எடப்பாடி ஆட்சியின் மீது பொய்யான கருத்துக்களை கூறினார்கள். அதன் விளைவாக இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று ஒரு பிளவுபட்ட அல்லது மன குழப்பத்தில் மக்கள் வாக்களித்துள்ளனர். 

அதிமுக இரண்டாக பிரிந்து உள்ளது என கருத்தை பலமாக வைத்து தந்திரமாக திமுக வாக்குகளை கைப்பற்றியது. திமுக அதிமுகவை வீழ்த்தி இருந்தால், சட்டமன்றத்தில் நாங்கள் எப்படி வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும். சட்டமன்றத்தில் எடப்பாடி ஆட்சி தான் வேண்டும். மக்கள் அளித்த மிகப்பெரிய வரவேற்பு ஆதரவு இந்த ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கின்ற வைரம் கீரிடம் தான் இந்த ஆட்சி. 

எங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான காலகட்டம் இருக்கிறது. அடுத்து வருகின்ற தேர்தலுக்கு இதைப் பயன்படுத்தி வெற்றியை நோக்கி செல்வோம்.

அதிமுகவை அளிப்போம் என்று கூறியவர்கள் அழிந்து விட்டார்கள் எங்களுக்கு இனிமே போட்டி திமுக மட்டும்தான். திமுகவை எப்படி ஓரங்கட்ட வேண்டும், திமுகவை அடுத்த தேர்தலில் எப்படி பதம் பார்க்க வேண்டும் என்பதை கருத்திலும் எங்கள் நடவடிக்கையில் இருக்கும். அமமுக ஒன்றுமில்லாமல் போய்விடும். அங்கு இருப்பவர்கள் அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள். 

திமுகவுக்கு வாக்களித்துவிட்டோமே என மக்களே வருத்தப்படுகிறார்கள்- ராஜேந்திர பாலாஜி

மதிமுக இப்படி ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிட்டார்கள். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் முடிவுக்கு வரும்.
தினகரன் எத்தனை நாள் பொய் சொல்லி கட்சியை ஏமாற்ற முடியும். மத்திய அரசிடம் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அவர்கள் டெல்லியில் நல்ல நட்புறவு வைத்துள்ளார்கள். எனவே தேவையான நிதிகளை தேவையான திட்டங்களையும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து பெறுவார்கள். 

திமுக பெற்ற வெற்றி தமிழகத்தில் பூஜ்ஜியம் தான் எந்த ஒரு பலனும் கிடைக்காது. வாக்களித்த மக்களே நேற்று இரவில் இருந்து யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். தேவையில்லாமல் திமுகவிற்கு ஆதரவு கொடுத்து விட்டோமோ என்று அவருடைய வெற்றியினால் ஒரு பைசா தமிழ்நாட்டிற்கு லாபம் கிடையாது. 

ஆனால்  அதிமுக, பாரதப் பிரதமர் மோடியிடம் பேசி தமிழகத்தின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சாலை வசதி கட்டமைப்பு வசதி மதுரையில் அமையவேண்டிய ஏய்ம்ஸ் கட்டுமான பணிகள் எல்லாத்தையும் நினைவுபடுத்தி தமிழ்நாட்டில் கவரக்கூடிய ஒரு வாய்ப்பு எங்கள் இயக்கத்தை பலப்படுத்த வேகமாக செயல்படக்கூடிய இந்த தேர்தல் களம் ஒரு பாடம்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP