கமலை சட்டை கலையாமல் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: தமிழிசை

இந்து தீவிரவாதம் குறித்து பேசிவரும் கமல் ஹாசனை மக்கள் விரைவில் சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
 | 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். "கமலை விட நன்றாக படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தான் பேசியது சரித்திர உண்மை என்று கூறுகிறார் கமல்.  ஆனால் அவர் சரித்திரத்தை திரித்து கூறுகிறார். மக்களிடையே பிரிவினை வாதத்தை உண்டாக்குகிறார். 

இந்து தீவிரவாதம் ரணத்தை ஆற்றும் ரணமாக இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால், உண்மையில் ரணம் ஆறிவரும் போது அதனை மீண்டும் புண்ணாக்கி ரத்தம் வரவைப்பது போல தான் கமலின் பேச்சு இருக்கிறது. 

தற்போதுள்ள ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவார் என்று கூறும் கமலை, விரைவில் மக்கள் சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவார்கள்" என்று பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP