தண்ணீர் தேவை பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தண்ணீர் தேவை பற்றி சிந்தித்து மக்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

தண்ணீர் தேவை பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தண்ணீர் தேவை பற்றி சிந்தித்து மக்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார். இதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ‘பொருளாதார வளர்ச்சிக்கு நீர்மேலாண்மை அவசியமான ஒன்றாகும். விண்ணில் இருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியையும் மறுசுழற்சி செய்து சேகரிக்க வேண்டும். பருவமழை காலத்திற்கு முன் நீர்நிலைகளை மேம்படுத்தி அதிகளவு நீர் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.

மேலும், நீரின் தேவையை சிந்தித்து மக்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த முதல்வர் பழனிசாமி, அடுத்த தலைமுறைக்கு வளமான நீராதாரத்தை நாம் விட்டுச்செல்ல வேண்டும். வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP