மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே....!

இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தமிழகத்தின் மரியாதை சர்வ தேச அளவில் இழிவு பெறும். அவர்கள் வெற்றி தமிழர்களின் மரியாதைக்கு ஏற்பட்ட அவமானமாகத்தான் இருக்கும். இந்த கரை நல்லது இல்லை.
 | 

மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே....!

லோக்சபா தேர்தலில் மோடி அலை என்று எதுவுமே தெரியாத நிலையில் நாடு முழுவதும் மோடி சுனாமி வீசியது போல 349 இடங்களை பிடித்துள்ளது. ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, போன்ற தென் மாநிலங்களில் பாஜ வெகு சொற்பமாக கூட இடங்களைப் பிடிக்க முடியவில்லை.

தமிழகத்தை பொறுத்தளவில் அதிமுக கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணி தனித்து 2 இடங்களை பிடித்த நிலையில் இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக அந்த அணி அனைத்து இடங்களையும் இழந்து வுிட்டது என்று சொல்ல தக்க அளவில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி .பெற்றது குறித்த விமர்சனத்தை விட நீலகிரி, துாத்துக்குடி,, மத்திய சென்னை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ், திமுக பெற்ற வெற்றி கட்டாயம் தமிழர்களின் நேர்மை, ஊழலுக்கு எதிரான எண்ணம் போன்றவற்றை கேள்விக்குறியாக்கி உள்ளது. நீலகிரி, துாத்துக்குடியில் வெற்றி பெற்றவர்கள் மீதான 2 ஜி வழக்கு அப்பீலில் இருக்கிறது, அவர்கள் மீது நீதிமன்றம் முதற்கட்டமாக ஊழலே. நடக்க வில்லை என்று தீர்ப்பளித்து விட்டது என்றாலும் கூட சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றவர் வழக்கில் ஜாமீனில் தான் வெளியில் உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர்கள் வெற்றி பெருகிறார்கள் என்பது தமிழக மக்களின் நேர்மையை சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

வெளிநாடுகளில் தனிமனித ஒழுக்கம் பற்றி மிகப் பெரிய கவலை இல்லாத நிலையில் தங்களை ஆள வந்துள்ள தலைவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதில் கேள்வி எழுமானால், அவர் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்படும். அது போல சிக்கலில் அமெரிக்க அதிபர்கள் சிலர் கூட போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் இங்கோ தனி நபர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என கற்பிக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் பற்றி சிந்திப்பதில்லை. அதனால் தான் இங்கே ஊழல் அரசியல்வாதி நல்லா திருடிவிட்டான் என்பதற்கு பதிலாக நல்லா சம்பாதித்துவிட்டான் என்று சொல்லப்பழகி விட்டோம். இது போன்ற நிலையில் தான் இவர்கள் வெற்றி சுலபமாக மாறி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியே இவரை வேட்பாளராக நீடித்தால் தோல்வி நிச்சயம்  என்ற நிலையில் மக்களை நன்கு உணர்ந்த அவர்கள் போராடி இடத்தை பிடித்து வெற்றி பெற்று இருகிறார்கள்.

இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தமிழகத்தின் மரியாதை சர்வ தேச அளவில் இழிவு பெறும். அதே நேரத்தில் அதிமுக கூட்டணி பணம் கொடுத்ததாகவும், திமுக பணமே கொடுக்கவில்லை என்று சொல்லி மறைமுகமாக பணம் கொடுத்தாகவும், டோக்கன் கொடுப்பதே தன் நிலைப்பாடாக மாறிவிட்ட ஒரு கட்சி என்று இந்த தேர்தலில் களம் கண்டது. இது போன்ற வாக்காளர்கள் இருக்கும் நிலையில் இவர்களால் தான் வெற்றி பெற முடியும். அவர்கள் வெற்றி தமிழர்களின் மரியாதைக்கு ஏற்பட்ட அவமானமாகத்தான் இருக்கும். இந்த கரை நல்லது இல்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP