ப.சிதம்பரம் தடம் மாறமாட்டார்: கே.எஸ்.அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 | 

ப.சிதம்பரம் தடம் மாறமாட்டார்: கே.எஸ்.அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்களில் 3 கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்தது அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார் என்றும், எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார் என்றும் தெரிவித்தார். 

மேலும், பிரதமர் மோடியை பாராட்டுவதால் அவருக்கு ஆதரவாக மாறிவிடுவார் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார். ஜம்மு-காஷ்மீர் தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP