எங்களின் ஒரே சொத்து நேர்மை: கமல் பெருமிதம் !

எங்களிடம் உள்ள ஒரே சொத்து நேர்மை என்று, காரைக்குடியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
 | 

எங்களின் ஒரே சொத்து நேர்மை: கமல் பெருமிதம் !

எங்களிடம் உள்ள ஒரே சொத்து  நேர்மை என்று, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

காரைக்குடியில் இன்று சிவகங்கை தொகுதி மநீம வேட்பாளர் சிநேகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "’மாறி மாறி கொள்ளையடித்துக் கொண்டவர்கள்தான் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களை பார்த்து அமுங்கிவிடக்கூடாது; துளிர்த்து எழ வேண்டும். எங்களுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு, தேர்தல் ஆணையம் ஏகப்பட்ட துன்பங்களை தருகிறது. கமிஷன் கேட்டு தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில்களை இரு கழகங்களும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவிட்டன. தமிழகத்திற்கு  நல்லது செய்ய எங்களை ஏவுங்கள்" என்றார் கமல்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP