எங்கள் தாய் ’அம்மாவின் ஆன்மா சும்மா விடாது’: சசிகலா,ஓ.பி.எஸ்- ஈபி.எஸ் அதிர்ச்சி!

புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழுக்குப் போட்டியாக ’எங்கள் தாய்’ என்னும் போட்டி இதழை போளூர் ஜெயகோவிந்தன் ஆரம்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
 | 

அ.தி.மு.க பேச்சாளரான ஜெயகோவிந்தன் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழை நடத்தி வந்தார். இந்த நாளிதழ் உரிமையை அவரிடம் இருந்து பெற்று, ஜெயலலிதா பிறந்த நாளான  கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக தொடங்கப்பட்டது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் ஆசிரியராக பணியாற்றிய மருது அழகுராஜ் ஆசிரியராகவும், ஜெயகோவிந்தன் துணை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், ஜெயகோவிந்தனிடம் இருந்த அனைத்து உரிமைகளையும் எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொள்ளப்பட்டது.

எங்கள் தாய் ’அம்மாவின் ஆன்மா சும்மா விடாது’: சசிகலா,ஓ.பி.எஸ்- ஈபி.எஸ் அதிர்ச்சி!

அதன்பிறகு சில நாட்களில் நமது அம்மா நிர்வாகம் அவரை ஒதுக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோர் மீது  அதிருப்தியான ஜெயகோவிந்தன் நமது அம்மாவில் இருந்து விலகி ’எங்கள் தாய்’ என்கிற இதழை தொடங்க உள்ளார். நமது புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் 2002-ம் ஆண்டு முதல் பதிவு செய்து நடத்தி வந்தார் ஜெயகோவிந்தன். ’அம்மான்னா சும்மாவா’ என்கிற சினிமா படத்தையும் எடுத்துள்ளார். இப்போது, ’அம்மாவின் ஆன்மா சும்மாவிடாது’ என்ற படத்தையும் தற்போது தயாரிக்க இருக்கிறார்.

எங்கள் தாய் ’அம்மாவின் ஆன்மா சும்மா விடாது’: சசிகலா,ஓ.பி.எஸ்- ஈபி.எஸ் அதிர்ச்சி!

எங்கள் தாய் பத்திரிக்கை வந்தால் அது சசிகலா குரூப்பை விமர்சனம் செய்யுமா? இல்லை நிர்வாகத்தில் இருந்து கழற்றிவிட்ட ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்பை தாக்குமா? யாருக்கு ஆதரவாக இந்தப்பத்திரிக்கை நடத்தப்பட இருக்கிறது என்பது பத்திரிக்கை வெளிவந்த பிறகே தெரிய வரும்.  இதே நிலைதான் கோவிந்தன் தயாரிக்க இருக்கும் ’அம்மாவின் ஆன்மா சும்மாவிடாது’ படத்தின் நிலையும்...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP