பாலியல் புகார் ஐ.ஜி மீது அக்கறை காட்டும் ஓ.பி.எஸ்..!?

பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி.,க்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறை கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 | 

பாலியல் புகார் ஐ.ஜி மீது அக்கறை காட்டும் ஓ.பி.எஸ்..!?

பிரச்னையை வளர விடாமல் உடனே பேசி சரி செய்யுங்கள் என பாலியல் புகாரில் சிக்கியிருக்கும்  தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி.,க்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறை கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

பாலியல் புகார் ஐ.ஜி மீது அக்கறை காட்டும் ஓ.பி.எஸ்..!?

தமிழக துணை முதலமைச்சர் அதிக அளவு சொத்து சேர்த்ததாக தி.மு.க தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைமையேற்றிருக்கும் தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்புதுறை ஐ.ஜி.முருகன் மீது அதே துறையில் பணியாற்றி வந்த பெண் எஸ்.பி மூன்று மாதங்களாக தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக அந்த ஐ.ஜி.மீது புகார் கொடுத்துள்ளார்.

 பாலியல் புகார் ஐ.ஜி மீது அக்கறை காட்டும் ஓ.பி.எஸ்..!?

அப்போது இதனை அறிந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஐ.ஜியை தொடர்பு கொண்டு, ‘’பிரச்னைக்கு ஆரம்பித்திலேயே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுங்கள்’’ என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.  ஐ.ஜி., மீதான இந்த அக்கறைக்கு, தன் மீது தொடுக்கப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருவதே காரணம் எனக்கூறப்படுகிறது. ஐ.ஜி.மீது புகாரளித்த பெண் எஸ்.பி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதே பொறுப்பில் இருந்து வருகிறார் ஐ.ஜி., முருகன். அவரை அவ்வப்போது தொடர்பு கொண்டு துணை முதலமைச்சர் தரப்பு சில அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.  அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவர் நெருக்காவனவர் எனக்கூறுகிறார்கள். 

பாலியல் புகார் ஐ.ஜி மீது அக்கறை காட்டும் ஓ.பி.எஸ்..!?

இது குறித்து சில தினங்களுக்கு முன் தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றசாட்டி இருந்தார். ‘’தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி.,மீது பெண் அதிகாரி பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில், அந்த ஐஜியை காப்பாற்றுவதிலேயே குறியாக தமிழக அரசு உள்ளது’’ எனக் குற்றம்சாட்டி இருந்தார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP