Logo

ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட்….?

சுமார் 5 ஆயிரம் பேருடன் ஆரம்பித்த வேலை நிறுத்தம் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் தொடர் வேண்டுகோள், எச்சரிக்கை, மிரட்டலை அடுத்து போராடத்தில் ஈடுபட்டவர்கள் எண்ணிக்கையை ஆயிரத்தி சொச்சமாக மாற்றிவிட்டது. அப்புறம் என்று டிஸ்மிஸ் நடவடிக்கை, அதற்கு பிறகு கோர்ட் கேஸ் என்று 6 மாதம் இழுக்கும் வழக்கு எல்லாமல் கண் முன்னே வரத்தானே வேண்டும்.
 | 

ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட்….?

வாழ்க்கை தொடங்கும் முன்பு வரை அனைவருக்குமே டாக்டர் கனவுதான். சாகும் வரை டாக்டர். பணம் பஞ்சம் இல்லாமல் கொட்டும். ஆனால் ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்ற இலக்கணத்தின் பொருளாக இருக்கும் டாக்டர்களாக இருந்தால், தனியார் ஆஸ்பத்திரிகளின் வசூல் ராஜாக்களாக தான் வாழ வேண்டும். அதிலும் அதிஷ்டம் கொண்டவர்கள் அரசு வேலைக்கு செல்வார்கள்.

அங்கு ஜாலியோ ஜாலிதான். காலையில் ஒரு மணி நேரம் ஓபி பார்த்தால் போதும். பிறகு நேராக கிளினிக் போய்விடலாம். அல்லது கார்ப்ரேட் ஆஸ்பத்திரிகளில் ஓபி பார்க்க சென்று விடலாம். அப்புறம் மாலை நேரம் இருந்தால் மருத்துவமனைக்கு சென்றால் போதும்.

அவரச ஆத்திரம் என்றால் கூட 3 மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரிக்கு சென்றால் பேகாதும். அடுத்த ஊரில் கிளினிக் என்றால் தன் துறையின் நண்பரை உடனே அனுப்பிவிட்டால் போதும். அதற்கு தானே ஒரு டாக்டர்தான் என்று மூக்கால் அழுது 2 டாக்டரை நியமித்துக் கொள்கிறோம்.

பெரிய பெரிய கட்டடங்களை பார்த்து பெரிய ஆஸ்பத்திரி என்று சேர்ந்தால், நாளை மதியம் ஆபரேஷன் 20 ஆயிரம் கட்டிவிடுங்கள் அதன் பிறகு தான் பெரிய டாக்டர் வருவார் என்றார்கள். பணத்தை கட்டினால் அரசு ஆஸ்பத்திரியில் சரியா வைத்தியம் பார்க்க மாட்டார் என்று நம்பினோமே அதே டாக்டர் தான் இங்கே பெரிய டாக்டர். இதற்கு அறுவைசிகிச்சைக்கு இவ்வளவு என்று வசூல் வேறு.

இது பிழைக்க தெரியாத நல்ல டாக்டரின் இலக்கணம். ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து திருடி செல்லாத, ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளியை தனது கிளினிக்கிற்கு மடைமாற்றாத டாக்டர்கள் தான் நல்ல டாக்டர் என்று நீங்கள் கூறினால், மேலே கூறிய அனைத்தும் நல்ல டாக்டருக்கு மட்டுமே பொருந்தும்.

இவர்கள் தான் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம், காலமுறை ஊதியம் என்றெல்லாம் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினார்கள்.

மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் கேட்பவர்கள், தனியே பயிற்சி செய்ய மாட்டேன் என்று கூறுவதில்லை. இந்த டாக்டர்களின் அறிவு தனியார் ஆஸ்பத்திரி  நோயாளிகளுக்கு கிடைக்கவிடாமல் செய்வது தவறு அல்லவா என்று சப்பைக்கட்டு வேறு.

ஆனால் இவர்களிடம் வரும் நோயாளிகள் கையில் காசு இல்லாதவர்கள். இலவசமாக வந்த வியாதியை காசு கொடுத்து விரட்ட வழி தெரியாதவர்கள். இதனால் தான் அனைத்தையும் அறிந்தால் கூட இவர்களை நெருக்காமல் இருக்கிறது.

அரசின் கருணையை மட்டுமே நம்பி மிரட்டல் விடும் டாக்டர்கள், தற்போது காலம் மாறிவிட்டது என்பதை உணர்வதே இல்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் தெலுங்கானா  அரசு 48 ஆயிரம் பேரை வேலையைவிட்டு துாக்கியது. அம்மா ஆட்சியில் டெஸ்மா, எஸ்பா பாய்ந்தது எல்லாம் கண்ணுக்கு முன் வந்து நின்றால் டாக்டர்கள் அரசை மிரட்டுவார்களா?

சுமார் 5 ஆயிரம் பேருடன் ஆரம்பித்த வேலை நிறுத்தம் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் தொடர் வேண்டுகோள், எச்சரிக்கை, மிரட்டலை அடுத்து போராடத்தில் ஈடுபட்டவர்கள்  எண்ணிக்கையை ஆயிரத்தி சொச்சமாக மாற்றிவிட்டது. அப்புறம் என்று டிஸ்மிஸ் நடவடிக்கை, அதற்கு பிறகு கோர்ட் கேஸ் என்று 6 மாதம் இழுக்கும் வழக்கு எல்லாமல் கண் முன்னே வரத்தானே வேண்டும்.

விளைவு டாக்டர்களுக்கு மழைக்கால்ததில் டெங்கு காய்ச்சலுக்கு சேவை செய்ய வேண்டும், சாதார நோயாளிகள் அபாய கட்டத்தை எட்டியது எல்லாம் நினைவுக்கு வந்தது. இதனால் மக்கள் சேவை நினைவுக்கு வரவே போராட்டம் போயே போச்சு.

சமீபத்தில் டாக்டர்களின் ஆபரேஷன் சக்சஸ் என்றாலும் அவர்கள் கோரிக்கை என்ற நோயாளி…. கதி?     

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP