வாரிசு இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும்: மு.க.ஸ்டாலின்

வாரிசு இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வர முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

வாரிசு இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும்: மு.க.ஸ்டாலின்

வாரிசு இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வர முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை விராச்சிலையில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘திமுக முதல்முறை ஆட்சியமைத்தபோது சீர்திருத்த திருமணம் செல்லும் என்ற சட்டத்தை கொண்டு வந்தது. 1967ஆம் ஆண்டிற்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. வாரிசு இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வரமுடியும்; வாரிசு இல்லாதவர்கள் எப்படி வரமுடியும்?. என்னை விமர்சித்தவர்கள், நம்மை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போனார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி நம்முடன் இருக்கும்வரை எந்த கொம்பனாலும் தமிழகத்தில் நுழைய முடியாது. மக்கள் நல்வாழ்வு துறையில் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP