திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என்று, ரஜினியின் அரசியல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 | 

திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என்று, ரஜினியின் அரசியல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘திராவிட மண்ணில் சாதி, மத, இன அரசியலுக்கோ, ஆன்மிக அரசியலுக்கோ இடமில்லை. தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் திமுக தடுத்து வருகிறது. ரஜினியும், கமலும் இணைந்தால் திமுகவின் வாக்குகளைதான் பிரிப்பார்கள். அதிமுகவின் வாக்குகளில் கை கூட வைக்க முடியாது’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், மீனவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் தமிழக அரசு பரிசீலனையில் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP