பாஜகவுடன் த.மா.கா இணைவதாக வரும் செய்தி உண்மையில்லை: ஜி.கே.வாசன் பதில்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே, கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டுள்ளதாகவும், பாஜகவுடன் த.மா.கா இணைவதாக வரும் செய்தி உண்மையில்லை என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 | 

கருத்து வேறுபாடு காரணமாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்ற தொண்டர்கள், மீண்டும் காங்கிரசில் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.காவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக பதில் அளித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜவுடன் இணையவுள்ளது என்று வெளியான தகவல் வடிகட்டிய பொய். த.மா.கா தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டுள்ளார். 

பத்திரிகைகளும், ஊடகங்களும் வேறு செய்திகள் இல்லை என்பதால் இது போன்ற செய்திகளை வெளியிடுகின்றனர் என்று நினைக்கிறேன். எனவே, த.மா.காவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை. த.மா.காவின் வளர்ச்சியை பொறுக்காமல் சதி செய்கின்றனர்" என்று பதில் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP