'தமிழக பாஜகவின் புதிய தலைவர் குப்புராமு !' 

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர், களத்தில் இறங்கி தேர்தல் அரசியலை சந்தித்தவர், திராவிட கட்சி வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை உருவாக்கியவர் என பல தகுதிகள் அவருக்கு இருப்பதால், அவரையே தமிழக பாஜக தலைவராக நியமிக்க தலைமை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.
 | 

'தமிழக பாஜகவின் புதிய தலைவர் குப்புராமு !' 

தமிழக பாஜகவின் புதிய தலைவராக கட்சியின் மாநில துணை தலைவரும், மூத்த நிர்வாகியுமான குப்புராமு நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தகவலை கசியவிட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது. 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை அடுத்து, மாநில தலைவர் பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. 

அதன் ஒரு பகுதியாக, கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள், கட்சியின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியோர், சாதிய பின்னணி, இவை அனைத்திற்கும் மேலாக, ஆர்.எஸ்.எஸ், பின்புலம் ஆகியவை ஒருங்கே உடைய நபரைத்தான் கட்சியின் மாநில தலைவராக நியமிக்க வேண்டும் என்ற குரல், பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளிடையே ஓங்கி ஒலிப்பதாக கூறப்படுகிறது. 

'தமிழக பாஜகவின் புதிய தலைவர் குப்புராமு !' 

அந்த வகையில் தமிழக பாஜகவிற்கு அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தகவலை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் கசியவிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: " தமிழகத்தில் கட்சியை வளர்க்கவும், உயிர்ப்புடன் வைக்கவும் மிகவும் பாடுபட்ட தமிழிசைக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த படியாக, மீண்டும் ஒரு பெண் தலைவரை கட்சி தலைவராக நியமிப்பதில், மேலிடத்திற்கு விருப்பம் இல்லை. 

அதாவது, தமிழிசை நியமிக்கப்பட்ட தருணம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு நிகராக பெண் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழிசைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அவர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிக கவனமாகவும், சாதுர்யமாகவும் கையாண்டார். 

இந்நிலையில், தமிழகத்தில் கட்சிக்கு மீண்டும் ஒரு பெண் தலைவரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என சங் நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், கட்சியின் மாநில துணை தலைவரான வானதிக்கு தலைவர் பொறுப்பு கிடைக்காது. அதே போல், நாடார் சமுதாயத்தை சேர்ந்த, போன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்துள்ளார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே தலைமை பொறுப்பு வகித்தவர். 

எனவே, தென் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் செல்வாக்குள்ள தலைவருமான, தற்போதைய மாநில துணை தலைவர் குப்புராமுவை அடுத்த தமிழக தலைவராக நியமிக்க கட்சியின் மேலிட தலைமை முடிவெடுத்துள்ளது. 

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் மிக நீண்ட கால சேவை புரிந்தவரும், மாநில பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமாக இருந்த அனுபவசாலியான குப்புராமு, மாநில தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என ஆர்.எஸ்.எஸ்., தலைமை, பாஜக தலைமைக்கு சிபாரிசு செய்துள்ளது. 

இதுவரை முக்குலத்தோர் சமுதாயத்திலிருந்து ஒருவர் கூட தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்படவில்லை என்பதும் ஓர் கருத்தாக ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.தகுதி வாய்ந்தவர், கொள்கைப்பிடிப்புள்ளவர், கறை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர் என்பன போன்ற காரணங்கள் இவருடை சாதகமான அம்சமாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. 

சேது சமுத்திரம் திட்டம் என்ற பெயரில், ராம சேது என்று அழைக்கப்படும், இந்துக்களின் புனிதமான பாலத்தை கப்பல் போக்குவர்த்துக்காக  உடைக்க வேண்டும் என்று, காங்கிரஸை சேர்ந்த மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணநிதியும், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டிஆர் பாலுவும் சாம, தான தண்டத்தை பல்வேறு முறைகளில் முயற்சித்தும், சிறிதும் அஞ்சாமல் அவர்களை எதிர்த்து மக்கள் இயக்கம் நடத்தியும், உச்சநீதிமன்றத்தில் முதல் மனுதாரராக இருந்து வழக்கு நடத்தியும் தன் திறமையை நிரூபித்தவர் குப்புராமு.

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர், களத்தில் இறங்கி தேர்தல் அரசியலை சந்தித்தவர், திராவிட கட்சி வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை உருவாக்கியவர் என பல தகுதிகள் அவருக்கு இருப்பதால், அவரையே தமிழக பாஜக தலைவராக நியமிக்க தலைமை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். 

மற்றபடி, ஜூனியர்களையோ, மாற்று கட்சியிலுருந்து, பாஜவில் சமீபத்தில் இணைத்தவர்களுக்கோ கட்சி தலைவர் பதவி வழங்குவதில், மேலிடத்துக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கோ பெரிய அளவில் உடன்பாடு இல்லை" இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையேதான், தமிழக பாஜகவின் அமைப்புச் செயலராக இருக்கும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்கான கேசவ விநாயகமும் , கூறியுள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. அவர் கட்சியில் எவ்வளவு பெரிய செல்வாக்குள்ளவர் என்பது கட்சியின் உள்வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக, குப்புராமு நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. 

newstm.in

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP