அதிமுகவை விடுத்து பாஜகவுடன் கைகோர்த்து விட்டாரா நமீதா ??

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், நடிகை நமீதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

அதிமுகவை விடுத்து பாஜகவுடன் கைகோர்த்து விட்டாரா நமீதா ??

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், நடிகை நமீதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நமீதா கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அதிமுக கட்சியில் இணைந்தார். தேர்தல் நேரங்களில் அதிமுகவின் பிரபலமான பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார் நமீதா.  இந்நிலையில், தற்போது இவர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை பிரபல நடிகரான ராதா ரவி அதிமுகவில் இருந்து நட்டா உதவியுடன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில், தமிழக சினிமா பிரபலங்களான நமீதா, ராதா ரவி இருவரும் பாஜகவுடன் இணைந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP