'எனது நல்ல நண்பர்' - ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

ராகுல் காந்தியின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 | 

'எனது நல்ல நண்பர்' - ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

ராகுல் காந்தியின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்த கட்சியின் உறுப்பினர்களுக்கு ராகுல் இனிப்பு வழங்கினார். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராகுலுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எமது நல்ல நண்பரான ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP