பிரிந்துள்ள மக்களை இணைப்பது இசை மட்டுமே: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 

சாதி, இனம், மொழி என பல்வேறு வகைகளில் பிரிந்துள்ள மக்களை இணைப்பது இசை மட்டுமே என்று, சென்னை கிண்டியில் புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியுள்ளார்.
 | 

மேலும், ‘மன அழுத்தத்தில் இருந்து விடுபட இசையே அருமருந்தாகும். மேற்கத்திய இசைக்கருவிகள் இரைச்சலை ஏற்படுத்துகின்றன; நம்முடைய மிருதங்கம் ரம்மியமான இசையை தரக்கூடியது. மிருதங்கம் நமது கலாசாரம் மற்றும் மதத்தின் ஒரு பகுதியாக உள்ளது’ என்றார்.

தொடர்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர், ‘மிகவும் தொன்மையான நமது நாகரிகம் புத்தகங்களில் பெருமளவில் பதிவு செய்யப்படவில்லை. மொழி, கலாசாரம் ஆகியவற்றை மறந்து விடாதீர்கள்;அதே நேரம் மற்றவர்களின் நம்பிக்கையுடன் சண்டையிடாதீர்கள். தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது; தமிழர் என்பது பெருமை, இந்தியராகவும் பெருமை கொள்ளுங்கள். வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தாலும் இந்தியராக ஒன்றிணைவோம்’ என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP