ஆப்கானில் பெண் பத்திரிகையாளர் கொலை

ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஆப்கானில் பெண் பத்திரிகையாளர் கொலை

ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் கிழக்குப்பகுதியில் வசித்து வந்தவர் மேனா மங்கல் எனும் பத்திரிக்கையாளர். இவர் அங்குள்ள ஒரு ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் அவர், அந்நாட்டு அரசின் கலாச்சார ஆலோசகராக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று அவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீஸார் இக்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் பத்திரிக்கையாளர் கொலைக்கு அங்குள்ள பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP