முரசொலி விதிவிலக்கல்ல: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முரசொலி நில விவகாரத்தில், அதன் வரலாற்றை தேடிப்பிடித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 | 

முரசொலி விதிவிலக்கல்ல: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முரசொலி நில விவகாரத்தில், அதன் வரலாற்றை தேடிப்பிடித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஒரு நுற்றாண்டுக்கும் மேலாகவே பஞ்சமி நில விவகாரம் பற்றி பேசப்பட்டு வந்தன. ஆனால் அப்போதெல்லாம் பெரிதளவில் விவாதமாக மாறாத பஞ்சமி நில விவகாரம் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாகியுள்ளது. 

சென்னை மாகாணத்தில் நிலமற்றவர்களாக ஏழ்மை நிலையில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைக் கண்டு மனம் வருந்திய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரெமென் ஹீர் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதலோடு 1893 ஆம் ஆண்டு அவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கி உதவி செய்தார். ஆனால் அப்படி வழங்கப்பட்ட நிலங்களையும்  ஆதிக்க சாதியினர் பண்ணையார்கள் பறித்துக்கொள்வார்கள் என்ற நிலை இருந்ததால் அந்த நிலத்தை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாங்கவோ விற்கவோ முடியும் மற்றவர்கள் யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது என்றும், அப்படி வாங்கினாலும் விற்பனை செய்தாலும் செல்லாது எனவும் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்டதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலமும் பஞ்சமி நிலம் என குறிப்பிடப்பட்டது. அரசாணை இருந்தாலும், பல இடங்களில் இந்த நிலங்கள் ஆதிக்க சாதியினரால் பிடிங்கப்பட்டது. இது குறித்து தலித் மக்கள் ஒரு நூற்றாண்டு காலமாக குரல் எழுப்பினாலும் அது பெரிதாக பேசப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அசுரன் படத்தை பார்த்த ஸ்டாலின் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்துகாட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

இதற்கு பலர் பாராட்டு தெரிவித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" என ட்விட்டரில் பதிவிட்டார். இதையடுத்து பஞ்சமி நில விவகாரம் விஷ்வரூபம் எடுக்க தொடங்கியது. 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சர்ச்சை எங்கிருந்தாலும் அதன் வரலாற்றை தேடிப்பிடித்து வருவாய்த்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும்,
முரசொலி நில விவகாரமும் விதிவிலக்கல்ல எனவும் தெரிவித்துள்ளார். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP