புதுச்சேரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு மோர் விநியோகம்!

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகரில் உள்ள வாக்குசாவடி எண் 10 -இல் இன்று (மே 12) மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது.
 | 

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இந்நிலையில், அவர்கள் வாக்களிப்பதை சற்று ஊக்குவிக்கும் பொருட்டு புதுச்சேரி வாக்குச்சாவடியில் இன்று பல்வேறு அமைப்புகள், கட்சியினர் சார்பில் ஐஸ் மோர் வழங்கப்பட்டு வருகிறது. 

பணப்பட்டுவாடாவை தடுக்க, புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் முதல்  நாளை(மே 13) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இங்கு காலை 11 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP