நவீன இந்தியாவின் இரும்பு மனிதர் மோடி: தமிழிசை புகழாரம்!

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் பிரதமர் நரேந்திர மோடி நவீன இந்தியாவின் இரும்பு மனிதரானார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 | 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிவித்தார்.

ஜம்மு- காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக உருவாக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து திருவண்ணாமலையில் இன்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நவீன இந்தியாவின் இரும்பு மனிதர் மோடி: தமிழிசை புகழாரம்!

அந்த பேட்டியில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட இந்த நாள் வேற்றுமையை சுட்டெரித்த நெருப்பு நாளாகும். காஷ்மீர் பிரச்னையை மதம் சார்ந்த பிரச்னையாக பார்க்காமல் மனம் சார்ந்த பிரச்னையாக பார்க்க வேண்டும். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் பிரதமர் நரேந்திர மோடி நவீன இந்தியாவின் இரும்பு மனிதரானார்’ என்று தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP