மு.க.அழகிரி மகள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர்!

மு.க.அழகிரியின் இளைய மகள் கயல்விழி வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

மு.க.அழகிரி மகள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர்!

மு.க.அழகிரியின் இளைய மகள் கயல்விழி வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மு.க.அழகிரியின் மூத்த மகள் அஞ்சுக செல்வி அமெரிக்காவில் செட்டிலாகி விட, கயல்விழி சென்னையில் இருக்கிறார். இவரது வீடு சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த கார் கயல்விழி வீட்டின் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்திருக்கிறது.  அந்த காரில் இருவர் இருந்துள்ளனர். அவர்களிடம் கயல்விழி வீட்டு வாட்ச்மேன் விசாரித்துள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த அந்த இருவரும் தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து  நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்தனர். தி.மு.கவில் சேர்க்கக்கோரி அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவரது மகள் வீட்டு வளாகத்திற்கு நுழைந்து தகராறில் ஈடுபட்ட அந்த இரு நபர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர்கள் என்பதும். வீடு மாறி சென்றதும் தெரிய வந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP