ஜெயலலிதாவாக மாறி வரும் மு.க.ஸ்டாலின்!

திமுக செயல் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.
 | 

ஜெயலலிதாவாக மாறி வரும் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க செயல் தலைவர்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய அவரது நடவடிக்கைகளை வைத்து ஸ்டாலின், ஜெயலலிதாவின் பாணியை பின்பற்ற ஆரம்பித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு செண்டிமெண்டான தொகுதி ஸ்ரீரங்கம். இந்த ஊர்தான் அவருக்கு பூர்வீகமும் கூட. ஸ்ரீரங்கம் கோயிலில் அவருக்காக பல யாயகங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதே கோயிலில்தான் நேற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டி யாகம் நடைபெற்றுள்ளது. அதே போல் கட்சி நடவடிக்கைகளிலும் ஜெயலலிதாவையே பின்பற்றி வருகிறார். பொதுவாக தி.மு.கவில் கட்சிக்கார தி.மு.க செயல் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

உறுப்பினர்கள் மீது புகார்கள் வந்தால், விளக்கம் கேட்டு விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபடும். அதற்கு உரியவர்கள் தரும் பதில் திருப்தியளிக்காக வகையில் இருந்தால் நடவடிக்கை பாயும். இதுவரை இதுதான் தி.மு.கவின் சட்ட திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. ‘சம்பந்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டு அந்தப்பதவியில் மற்றவர் நியமிக்கப்படுகிறார் என ஜெயலலிதா பாணியில் தடாலடியாக கட்சிப்பத்திரிக்கையில் அறிவிப்பு செய்து விடுகிறார் ஸ்டாலின்.

அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் தி.மு.க-வில், கருணாநிதி, ஸ்டாலின் கலந்து கொள்கிற பொதுக் கூட்டங்களில், அவர்கள் மேடைக்கு வரும்போது பட்டாசு வெடித்து  உற்சாக வரவேற்பு கொடுப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோது, கட்சியினர் திருமணம், பொதுக்குழுவுக்கு வந்தால், பட்டாசு வெடிக்க மாட்டார்கள். வழிநெடுக நிர்வாகிகள் வரிசையாக கை கட்டி நின்று, தலைகுனிந்து வணங்கி வரவேற்பார்கள். ஜெயலலிதாவின் கார் கண்ணாடியே மறையும் அளவுக்கு, பூக்களை துாவி வரவேற்பார்கள். இப்போது அதே பாணியில ஸ்டாலினுக்கும், கட்சியினர் பூத்தூவி, பவ்யமாக வரவேற்பு கொடுக்க துவங்கி விட்டார்கள்’ என்கிறார்கள். 

இதனையறிந்த அ.தி.மு.கவினர், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக இருக்கிறதே என புன்னகைக்கிறார்களாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP