திமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 | 

கடந்த சில வாரமாக உடல்நலக்குறைவு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எல்.ஏ ராதாமணி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராதாமணி. அவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஜிப்மர் மருத்துவமமனையில் வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ ராதாமணியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன்  ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP