கதவைச் சாத்தும் மு.க.ஸ்டாலின்... மீண்டும் மக்கள் நலக் கூட்டணி!?

தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற வாய்ப்பில்லை என்கிற தகவல் உறுதியாகி இருக்கிறது. இதனால் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி உருவாகும் நிலை உருவாகி இருக்கிறது.
 | 

கதவைச் சாத்தும் மு.க.ஸ்டாலின்... மீண்டும் மக்கள் நலக் கூட்டணி!?

தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற வாய்ப்பில்லை என்கிற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் மு.க.ஸ்டாலின் மீது அக்கட்சித் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

கதவைச் சாத்தும் மு.க.ஸ்டாலின்... மீண்டும் மக்கள் நலக் கூட்டணி!?

கருணாநிதி காலத்தில் கூட்டணிக்காக பிற கட்சிகளிடம் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை இருந்து வந்தது. ஆனால், ஸ்டாலின் தலைவரான பிறகு அந்தப் போக்கில் கறாராக இருக்க விரும்புகிறார் என்கிறார்கள். பலன் உள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்கிற முடிவில் உறுதியாக இருக்கும் அவர் அதற்காக பல்வேறு பகுதிகளில் கள ஆய்வையும் மேற்கொண்டு வருகிறது தி.மு.க.

இந்நிலையில், தேர்தல் கள நிலவரம் தொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், சில நிபுணர்கள், ஒரு அறிக்கை தயாரித்து கொடுத்திருக்கிறார்கள். அதில், கொங்கு மண்டலத்தில் தான், தி.மு.க.,வுக்கு பல முறை தோல்வி கிடைத்திருக்கிறது. வட மாவட்டங்களில், பா.ம.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் செல்வாக்காக இருந்தும், தி.மு.க.,வுக்கு பெரும்பாலும் வெற்றி கிடைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் ஐந்து சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருக்கிற பா.ம.க., வெறும் முக்கால் சதவீதம் ஓட்டு வங்கியை வைத்திருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சியால் தி.மு.க.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கதவைச் சாத்தும் மு.க.ஸ்டாலின்... மீண்டும் மக்கள் நலக் கூட்டணி!?

அவர்கள், நம்முடன் வந்தாலும், பெரிய அளவில் லாபம் இல்லை. சிதம்பரம் தொகுதிக்கு மட்டும் சம்மத்தித்தால் மட்டும், திருமாவளவனை சேர்த்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதே நேரம், கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற, அந்தப் பகுதிகளில் இருக்கிற கட்சிகளை அரவணைத்து செல்லலாம் என ஆலோசனையும் வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பாமக- விடுதலைச் சிறுத்தைகளை கழற்றி விட முடிவெடுத்து விட்டது திமுக. கூட்டணியில் மதிமுகவும் ஊசலாட்டத்தில்தான் இருக்கிறது. 

கதவைச் சாத்தும் மு.க.ஸ்டாலின்... மீண்டும் மக்கள் நலக் கூட்டணி!?

இதனால், மக்கள் நலக் கூட்டணி மீண்டும்உருவாகும் நிலை ஏற்பட்டு விடுமோ என வாக்காளர்கள் பீதியடைந்து உள்ளனர். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP