பொங்கல் பரிசு பையில் ஓபிஎஸ் படம் மிஸ்ஸிங் - பிரச்சனை ஏற்பட காரணம் தேடுகிறாரா எடப்பாடி!!!

வரும் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்காக, ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 உடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.
 | 

பொங்கல் பரிசு பையில் ஓபிஎஸ் படம் மிஸ்ஸிங் - பிரச்சனை ஏற்பட காரணம் தேடுகிறாரா எடப்பாடி!!!

வரும் 2020ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்காக, ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 உடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி. 

பொங்கல் பண்டிகைக்கான பரிசு  பையில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 கரும்பு துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பையினுள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் படம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி மிகபெரும் கேள்விக்குறியாக எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பதவியேற்று கொண்டார். ஜெயலலிதா காலம் தொட்டே அவருடன் இருந்து வந்தவரான பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் பதவி இல்லை என்றானது. 

பின்பு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமிடையே பலத்த கருத்து வேறுபாடுகளும், குழப்பங்களும் நிலவி வந்ததை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் அனைத்தும் சரிகட்டப்பட்டு ஓர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து, இருவரும் ஒன்றாக இணைந்தனர். பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். 

பின்பு அனைத்தும் சீரான நிலையில் சென்றுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் கடந்த சில மாதங்கள் முன்பு மோடி தலைமையிலான ஆட்சி அமைப்பது குறித்து அமைச்சர்கள் அமர்த்தும் விவகாரத்தில் அதிமுக கட்சிக்கு வழங்கப்படவிருந்த ஒரு அமைச்சர் பதவியும் பறிப்போய் விட்டதாகவும் அதற்கு காரணம் ஓபிஎஸ் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழும்பிய நிலையில், அனைத்தும் சரியாக உள்ளதாகவும், இருவருக்குமிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், அவர்கள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதாகவும் அக்கட்சி தலைவர்கள் சிலர் பேட்டி அளித்தனர்.

இந்நிலையிலும், பல நேரங்களில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உள்ளது போன்ற சூழல் எழுந்து பின்பு அடங்கும். இதை தொடர்ந்து, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய பொங்கல் பரிசு பையில் ஓபிஎஸின் படம் காணவில்லையாம். அப்படியென்றால், இருவருக்குமிடையே மீண்டும் வேறுபாடுகள் எழத் தொடங்கி விட்டனவா அல்லது ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டுவதற்கென்றே இத்தகைய காரணங்களை தேடிப்பிடித்து செயல்படுத்துகிறாரா முதலமைச்சர் பழனிசாமி என்ற கேள்வியை இந்த தகவலை தொடர்ந்து அனைவரது மனதிலும் எழுந்து நிற்கிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP