மீம்ஸ் கிரியேட்டர்கள் என்னிடம் தோற்றுப் போய் விட்டார்கள்: தமிழிசை

மீம்ஸ் கிரியேட்டர்கள் எவ்வளவுதான் தன்னை கஷ்டப்படுத்த நினைத்தாலும் அதில் அவர்கள் தோற்றுப் போய் விட்டதாக தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை தி.நகரில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தமிழிசை, எவ்வளவுதான் மீம்ஸ் கிரியேட்டர்கள் என்னை கஷ்டப்படுத்த நினைத்தாலும், அதில் அவர்கள் தோற்றுப் போய்விட்டனர். நான் குள்ளமாக இருப்பதை விமர்சிப்பார்கள். அதைக் கண்டு ஒருபோதும் நான் வருத்தப்படவில்லை. 

எதிர்மறையை நேர்மறையாக செய்தால் வெற்றி நிச்சயம். பயணத்தை ரசித்துக்கொண்டே செல்லும் பொழுது நாம் செல்ல வேண்டிய இலக்கை எளிதாக அடைந்து விடலாம். அப்பாவின் பிறந்தநாள் நிகழ்சியில் கலந்து கொள்ள முடியாத சூழலில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று அப்பா கூறுவார்; நான் கண்டதை படித்து ஆளுநராகி இருக்கிறேன். மற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. மேதகு என்பதைவிட பாசமிகு என அழைப்பதை தான் நான் விரும்புகிறேன். அது தான் எனக்கு மகிழ்ச்சியும் கூட. படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதிலும் பெண்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP