ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு?

வெற்றிதான் முக்கியம் என்று கருதி, ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, ஈரோட்டில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு?

ஈரோடு மக்களவை தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அக்கட்சியின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

தொடர்ந்து, ஈரோடு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்குகிறதோ, அந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் வேட்பாளர் கணேச மூர்த்தி வருகிற 25ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், மதிமுகவின் சின்னமான பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேறு சின்னம் தான் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தில் இருந்து தகவல் வெளியான நிலையில், வெற்றிதான் முக்கியம் என்று கருதி, ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, ஈரோட்டில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும், மதிமுக சார்பில் இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP