மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. அதில், பூரண மதுவிலக்கு, 7 பேர் விடுதலை, ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
 | 

மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ!

சென்னை தாயகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ளார். 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மக்களவைத் தொகுதியான ஈரோட்டில் மதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த அ.கணேச மூர்த்தி ஈரோட்டில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், சென்னையில் மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் வைத்து மதிமுகவின் தேர்தல் அறிக்கையினை வைகோ இன்று வெளியிட்டார். 

அதில், பூரண மதுவிலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, அணு உலை பூங்காவை கைவிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், மின்சார சட்ட திருத்த முன்முடிவு 2018யை திரும்பப்பெற வேண்டும்,  தமிழீழதிற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இணையதள வணிகத்திற்கு தடை, நியூட்ரினோ திட்டத்திற்கு தடை, சீமைக்கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP