விரைவில் வேலூர் தொகுதிக்கு மக்களவைத் தேர்தல்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஆவார்.
 | 

கதிர் ஆனந்த் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறையினர் துரைமுருகன் மற்றும் அவரது உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் சுமார் 11 கோடி அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. 

மக்களவைத் தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில் அடுத்த கட்டமாக, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP