மக்களவை தேர்தலும், வாக்குப்பதிவு சதவீதமும்

கடந்த மக்களவை தேர்தலில், 73.68 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில், இம்முறை அதை விட குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. எனினும், கடந்த முறை, 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இம்முறை, 38 தொகுதிகளில் மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 | 

மக்களவை தேர்தலும், வாக்குப்பதிவு சதவீதமும்

நாட்டின், 17வது மக்களவை தேர்தலில், தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில், 70.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட, கிட்டத்தட்ட 3 சதவீதம் குறைவாகும். 

நாட்டின், 17வது மக்களவை தேர்தல், ஏப்., 11 துவங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

தமிழகத்தில் வேலுார் நீங்களாக, 38 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மாெத்தம், 70.9 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது, கடந்த 2014ம் ஆண்டு தேர்தலை விட ஏறக்குறைய, 3 சதவீதம் குறைவாகும். 

கடந்த மக்களவை தேர்தலில், 73.68 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில், இம்முறை அதை விட குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. எனினும், கடந்த முறை, 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இம்முறை, 38 தொகுதிகளில் மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP