உள்ளாட்சித் தேர்தல்:  நாளை காலை அறிவிப்பு ?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு நாளை காலை வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

உள்ளாட்சித் தேர்தல்:  நாளை காலை அறிவிப்பு ?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு நாளை காலை வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016ஆம் ஆண்டு தேர்தல் முயற்சி செய்த போது, திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை  அடுத்து, தேர்தல் நடத்த நீதிமன்றம் தடைவிதித்தது. அதன்பிறகு, தேர்தல் நடக்காமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இந்த நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய வழக்கை தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  நாளை காலை 9.45 மணிக்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP