டிசம்பர் 7ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணையர் உறுதி!!!

டிசம்பர் முதல் வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

கடந்த 2016ஆம் ஆண்டு, திமுக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நீதிமன்ற தடை உத்தரவின்படி, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இதை தொடர்ந்து, சமீபத்தில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கியது. 

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த மாநில தேர்தல் ஆணையம், டிசம்பர் முதல் வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டபடி, முதல் வாரம் முடிவதற்குள் செய்தியாளர்களை அழைத்து நிச்சயமாக தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP