’கேட்டாலே அடிப்பாங்க...’ ஜகா வாங்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்!

மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நிதி திரட்டி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை தேர்தலுக்கு 70 கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 | 

காங்கிரஸ்காரர்களுக்கு அவ்வளவு நிதி கிடைத்துவிடுமா என்ன? கடினம் என்பது தெரிந்தே ஆசை வலைவீசியிருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ’வசூல் செய்து கொடுக்கும் நிதியில், 10, 20 சதவீதம் கமிஷன் எடுத்துக் கொண்டு மீதித் தொகையை கட்சியிடம் ஒப்படையுங்கள்’ எனக் கூறியிருக்கிறார்களாம். ஏற்கெனவே உறுப்பினர் சேர்க்கையின் மூலம் வசூலான சந்தாத்தொகை ரூ 2 கோடியே 38 லட்சத்தில் இரண்டு கோடி ரூபாயை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் லபக்கிய விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 70 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தால் எங்கே போகும் என நொந்து கொள்ளும் கதர்சட்டை நிர்வாகிகள், 'எங்க மாவட்டத்துல, தேர்தல் நிதியெல்லாம் கேட்டா, அடிக்க வருவாங்க' எனக் கூறி ஓடாத குறையாக நழுவி விடுகிறார்களாம்.

’கேட்டாலே அடிப்பாங்க...’ ஜகா வாங்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்!

ஏற்கெனவே கட்சிக்குள் ஆயிரத்தெட்டு கோஷ்டிகள். இதில் 70 கோடி வசூலிப்பதெல்லாம் நடக்கிற காரியமா? என அங்கலாய்ப்புக் குரல்கள் சத்தியமூர்த்தி பவனில் எதிரொலிக்கின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP