கங்கையை போலவே, வைகை நதியும் தூய்மையாக்கப்படும்: தேனியில் பிரதமர் மோடி!

மக்களவைத் தேர்தலையொட்டி, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு, பிரதமர் மோடி முதலாவதாக இன்று தேனிக்கு வருகை தந்தார்.
 | 

தேனி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 

தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கரூர்- திருச்சி மின்வழிப்பாதை வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னை - மதுரை  இடையே தேஜஸ் ரயில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை- செட்டிகுளம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கிசான் சமமான் நிதி திட்டம் விவசாயிகளுக்கு பலனுள்ளதாக இருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஒருங்கிணைந்த் ஜவுளிப்பூங்கா அமையவுள்ளது. விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு ஆதார விலை கிடைத்துள்ளது. 

கங்கையை போலவே தமிழகத்தில் வைகை நதியும் தூய்மையாக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் மீட்டர் கேஜ் ரயில் பாதை மட்டும் இருந்தது. தற்போது அகல ரயில் பாதை உள்ளது. 

இலங்கை தமிழர்களின் வளர்ச்சிக்காக இந்த அரசு பாடுபடும். மின்னணு வாக்கு இயந்திரத்தில் சீர்திருத்தம் செய்வோம், 

இந்த பகுதியில் வேட்பாளரை தேடுகிறது காங்கிரஸ். ஆனால், அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், மக்களோடு மக்களாக இருப்பவர். வருகிற ஏப்ரல் 18ம் தேதி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

புதிய இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தில் நம்மைக் சேர்த்துக்கொள்வோம்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP